வியாழன், 4 மார்ச், 2010

பெண்ணே உனக்கே உனக்காய்
























அடங்கி அடங்கி
ஆண்டாண்டு காலமாய்
அடுப்பங்கரையே உன் உலகமென்று
முடங்கிக் கிடந்தது போதும்.
புதுமைகள் அறிந்து
பழமைகள் களைந்து
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
சாதனை படைக்க - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

நதியென்றும் மலரென்றும்
நிலவென்றும் அமுதென்றும்
போகம் தரும் காதற் பொருளாய்
கவிஞர் உன்னைக் கண்டது போதும்
சரித்திரம் படைக்கும் புயலாய்
அறியாமை களையும் தீயாய்
அகிலம் உனைக்காண
அடங்காத வேகத்துடன் - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

பின் தூங்கி முன்னெழுந்து
தலை கோதி அடி வருடி
அருகிருந்து தூங்க வைத்து
தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்
துணைவியாய் மட்டும் - நீ
வாழ்ந்தது போதும்
அடக்கு முறைகளை உடைத்து எறிந்து
அடிமை வாழ்வின் சங்கிலி அறுத்து
அறிவியல் உலகின் சாதனைப் பெண்ணாய்
உலகம் உனைக்காண - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து
வா


37 கருத்துகள்:

  1. //நதியென்றும் மலரென்றும்
    நிலவென்றும் அமுதென்றும்
    போகம் தரும் காதற் பொருளாய்
    கவிஞர் உன்னைக் கண்டது போதும்//

    புத்துணர்வு ததும்பும் கவிதை இயற்றிய நி கே - வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நதியென்றும் மலரென்றும்
    நிலவென்றும் அமுதென்றும்
    போகம் தரும் காதற் பொருளாய்
    கவிஞர் உன்னைக் கண்டது போதும்
    சரித்திரம் படைக்கும் புயலாய்
    அறியாமை களையும் தீயாய்
    அகிலம் உனைக்காண
    அடங்காத வேகத்துடன் - பெண்ணே
    துணிந்து நீயும் எழுந்து வா//

    அருமையான வரிகள்.. நல்ல எழுதிருக்கீங்க நி.கே

    பதிலளிநீக்கு
  3. இன்னமும் சொல்லிகிட்டேதான் இருக்க வேண்டியிருக்கு இல்லை...? நன்றாக எழுதி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. காலம் மாறி கொண்டுள்ளது. எல்லாமும் மாறி கொண்டு வருகிறது. கவலை வேண்டாம் நி.கே

    பதிலளிநீக்கு
  6. நல்லா எழுதி இருக்கீங்க நிகே.

    பதிலளிநீக்கு
  7. மகளிர் தினக் கவிதை அருமை நினவுகளுடன் நிகே

    பதிலளிநீக்கு
  8. ஜான் கார்த்திக் ஜெ சொன்னது…

    //நதியென்றும் மலரென்றும்
    நிலவென்றும் அமுதென்றும்
    போகம் தரும் காதற் பொருளாய்
    கவிஞர் உன்னைக் கண்டது போதும்//

    புத்துணர்வு ததும்பும் கவிதை இயற்றிய நி கே - வாழ்த்துக்கள்!
    5 மார்ச், 2010 12:23 am

    ////

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  9. திவ்யாஹரி சொன்னது…

    நதியென்றும் மலரென்றும்
    நிலவென்றும் அமுதென்றும்
    போகம் தரும் காதற் பொருளாய்
    கவிஞர் உன்னைக் கண்டது போதும்
    சரித்திரம் படைக்கும் புயலாய்
    அறியாமை களையும் தீயாய்
    அகிலம் உனைக்காண
    அடங்காத வேகத்துடன் - பெண்ணே
    துணிந்து நீயும் எழுந்து வா//

    அருமையான வரிகள்.. நல்ல எழுதிருக்கீங்க நி.கே
    5 மார்ச், 2010 1:35 am

    /////

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம். சொன்னது…

    இன்னமும் சொல்லிகிட்டேதான் இருக்க வேண்டியிருக்கு இல்லை...? நன்றாக எழுதி உள்ளீர்கள்
    5 மார்ச், 2010 6:23 am

    //////

    நம் உரிமையை நாம்தானே பெறவேண்டும்
    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  11. அண்ணாமலையான் சொன்னது…

    மிக நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
    5 மார்ச், 2010 8:19 am

    ///

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  12. தமிழ் உதயம் சொன்னது…

    காலம் மாறி கொண்டுள்ளது. எல்லாமும் மாறி கொண்டு வருகிறது. கவலை வேண்டாம் நி.கே
    5 மார்ச், 2010 12:31 pm

    ////


    புதிய உலகமாவது பெண்ணை
    சாதிக்கப் பிறந்தவளாய் பார்க்கட்டும்
    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  13. MANO சொன்னது…

    THANKS FOR VISIT MY PAGE.

    MANO
    ///

    நன்றி தங்கள் வருகைக்கு

    பதிலளிநீக்கு
  14. சுசி சொன்னது…

    நல்லா எழுதி இருக்கீங்க நிகே.
    5 மார்ச், 2010 10:48 pm

    ////

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  15. thenammailakshmanan சொன்னது…

    மகளிர் தினக் கவிதை அருமை நினவுகளுடன் நிகே
    6 மார்ச், 2010 1:47 pm
    ///

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  16. காலம் மாறுது .கொஞ்சம் பெண்கள் கூட தடையாய் உள்ளனர் .தெரியுமா?

    பதிலளிநீக்கு
  17. ஏன் இந்தக் கொலைவெறி...? நல்ல தருணத்திற்கு ஏற்ற அருமையான பதிவு.. ஆண்களைச் சாடாமல் பெண்ணை மட்டும் பொங்கி எழச் சொல்லியிருக்கும் உங்கள் கோபத்தில் இருக்கும் கண்ணியத்தை ஒரு ஆணாக நான் உணர்கிறேன்..

    தொடருந்து விடுங்கள் உங்கள் எழுத்துக் கணைகளை..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  18. {{{{{{{{{ பின் தூங்கி முன்னெழுந்து
    தலை கோதி அடி வருடி
    அருகிருந்து தூங்க வைத்து
    தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்
    துணைவியாய் }}}}}}}

    அருமை வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  19. padma சொன்னது…

    காலம் மாறுது .கொஞ்சம் பெண்கள் கூட தடையாய் உள்ளனர் .தெரியுமா?
    7 மார்ச், 2010 9:39 am

    //////

    சரிதான் தோழி
    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
  20. மகளீர்தின வாழ்த்துக்களோடு.. அழகிய கவிதை வடிதமைக்கும் மிகுந்த பாராட்டுக்கள் நிகோ.குட்டிப்பொண்ணு எப்படியிருக்கு..

    பதிலளிநீக்கு
  21. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

    ஏன் இந்தக் கொலைவெறி...? நல்ல தருணத்திற்கு ஏற்ற அருமையான பதிவு.. ஆண்களைச் சாடாமல் பெண்ணை மட்டும் பொங்கி எழச் சொல்லியிருக்கும் உங்கள் கோபத்தில் இருக்கும் கண்ணியத்தை ஒரு ஆணாக நான் உணர்கிறேன்..

    தொடருந்து விடுங்கள் உங்கள் எழுத்துக் கணைகளை..

    நன்றி..
    ////


    இது கொலை வெறி அல்ல
    இது என் ஆதங்கம் மட்டுமே
    நன்றி தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும்

    பதிலளிநீக்கு
  22. ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ சொன்னது…

    {{{{{{{{{ பின் தூங்கி முன்னெழுந்து
    தலை கோதி அடி வருடி
    அருகிருந்து தூங்க வைத்து
    தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்
    துணைவியாய் }}}}}}}

    அருமை வாழ்த்துக்கள் !
    8 மார்ச், 2010 12:35 am

    ////

    நன்றி தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்

    பதிலளிநீக்கு
  23. தாராபுரத்தான் சொன்னது…

    அதெல்லாம் அப்போ..இப்போ..
    8 மார்ச், 2010 6:19 am

    ////

    இப்போதும் பல பெண்களின் வாழ்க்கை இதுதான்
    நன்றி தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும்

    பதிலளிநீக்கு
  24. வினோத்கெளதம் சொன்னது…

    மகளிர்தின வாழ்த்துக்கள்
    8 மார்ச், 2010 11:43 p

    /////

    நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  25. அன்புடன் மலிக்கா சொன்னது…

    மகளீர்தின வாழ்த்துக்களோடு.. அழகிய கவிதை வடிதமைக்கும் மிகுந்த பாராட்டுக்கள் நிகோ.குட்டிப்பொண்ணு எப்படியிருக்கு..
    9 மார்ச், 2010 9:08 am

    ////


    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கும் வாழ்த்துக்கும்
    குட்டிப்பொண்ணு நலமே

    பதிலளிநீக்கு
  26. பாரதியின் புதுமைப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்...:)

    பதிலளிநீக்கு
  27. பொங்கிய கவிதை அருமை -- வாழ்த்துக்கள் .
    நேற்று பாராளுமன்றத்தில் பாரதியின் கவிதை ஒலித்ததை கேட்டு இருப்பீர்கள் ..
    (பட்டங்கள் ஆள்வதும் ....... )
    அதற்க்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. தக்குடுபாண்டி சொன்னது…

    பாரதியின் புதுமைப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள்...:)
    10 மார்ச், 2010 9:43 am


    ////

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும்

    பதிலளிநீக்கு
  29. பத்மநாபன் சொன்னது…

    பொங்கிய கவிதை அருமை -- வாழ்த்துக்கள் .
    நேற்று பாராளுமன்றத்தில் பாரதியின் கவிதை ஒலித்ததை கேட்டு இருப்பீர்கள் ..
    (பட்டங்கள் ஆள்வதும் ....... )
    அதற்க்கும் வாழ்த்துக்கள்
    10 மார்ச், 2010 1:37 pm

    ////

    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும்

    பதிலளிநீக்கு
  30. Dr.P.Kandaswamy சொன்னது…

    ஆஜர் போட்டுக்கிறேன்
    10 மார்ச், 2010 6:12 pm
    ///


    நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும்

    பதிலளிநீக்கு
  31. //போகம் தரும் காதற் பொருளாய்
    கவிஞர் உன்னைக் கண்டது போதும்//
    உண்மையின் வலி உங்கள் எழுத்துக்களில்.
    வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  32. நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும்

    பதிலளிநீக்கு
  33. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு