சனி, 2 ஜனவரி, 2010

குழந்தைநீ கசக்கி எறியும்
கடதாசிப் பூக்களும்
கிழித்துப் போடும் - என்
விரிவுரைக் குறிப்புகளும்
உடைத்து எறியும் - உன்
விளையாட்டுப் பொருட்களும்தான்
இப்போதெல்லாம்
நம் வீட்டை அழகுபடுத்துகின்றன.