கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 மார்ச், 2010

பெண்ணே உனக்கே உனக்காய்
























அடங்கி அடங்கி
ஆண்டாண்டு காலமாய்
அடுப்பங்கரையே உன் உலகமென்று
முடங்கிக் கிடந்தது போதும்.
புதுமைகள் அறிந்து
பழமைகள் களைந்து
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
சாதனை படைக்க - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

நதியென்றும் மலரென்றும்
நிலவென்றும் அமுதென்றும்
போகம் தரும் காதற் பொருளாய்
கவிஞர் உன்னைக் கண்டது போதும்
சரித்திரம் படைக்கும் புயலாய்
அறியாமை களையும் தீயாய்
அகிலம் உனைக்காண
அடங்காத வேகத்துடன் - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

பின் தூங்கி முன்னெழுந்து
தலை கோதி அடி வருடி
அருகிருந்து தூங்க வைத்து
தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்
துணைவியாய் மட்டும் - நீ
வாழ்ந்தது போதும்
அடக்கு முறைகளை உடைத்து எறிந்து
அடிமை வாழ்வின் சங்கிலி அறுத்து
அறிவியல் உலகின் சாதனைப் பெண்ணாய்
உலகம் உனைக்காண - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து
வா


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காதலுடன்



உன் ஒற்றைப் பார்வையால்
என் நெஞ்சைக் கொள்ளையடித்தவனே
சந்தித்த முதல் நாளே
விழியில் விழுந்து
என் பார்வையானவனே
வார்த்தைகள் தேவையில்லை
அன்பை உணர்த்த
புன்னகை மட்டும்
போதுமென்று
புரிய வைத்தவனே.
ஆயுள் வரைக்கும்
உன்னருகில் துணையாய்
வாழ்தலே என் விருப்பம்



***********காதலர் தின வாழ்த்துகள் *****************

சனி, 2 ஜனவரி, 2010

குழந்தை



நீ கசக்கி எறியும்
கடதாசிப் பூக்களும்
கிழித்துப் போடும் - என்
விரிவுரைக் குறிப்புகளும்
உடைத்து எறியும் - உன்
விளையாட்டுப் பொருட்களும்தான்
இப்போதெல்லாம்
நம் வீட்டை அழகுபடுத்துகின்றன.

புதன், 16 டிசம்பர், 2009

தாய்மை


உன் பாதங்களால்
என் நெஞ்சில் உதைந்தபோது
மகிழ்ச்சியில் என் மனம்
துள்ளிக் குதித்தது.

கோபத்தில் நான் உன்னை
அடித்த போது
உனக்குப் பதிலாக
என்மனம் தானே அழுகிறது.



வியாழன், 10 டிசம்பர், 2009

எனக்கு கவிதை எழுத ஆசை

எனக்கும் கவிதை

எழுதஆசை

இலக்கியம்எதுவும்கற்கவில்லை

இலக்கணம்எதுவும்அறிந்ததில்லை

மொழியின் வகைகள் புரிந்ததில்லை

ஆனாலும்
எனக்கு கவிதை எழுத ஆசை
மரபுக் கவியின் இலக்கணமோ
புதுக்கவியின் வரையறையோ
எதுவும் அறியா பாமரன் நான்
ஆனாலும்
எனக்கு கவிதை எழுத ஆசை
தமிழ் மொழியில் உள்ள
அணி அறியேன்
தொல்காப்பியம் கூறும்
யாப்பறியேன்
பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன்
ஆனாலும்எனக்கு கவிதை எழுத ஆசை